ரங்கன ஹேரத் குறித்த உலக பிரபலங்களின் ஒரு பார்வை



அண்மைய நாட்களில் எப்போதும் தோல்விகளையே பார்த்து துவண்டு போன இலங்கை அணியின் இரசிகர்களுக்கு, பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் 21 ஓட்டங்களால் கிடைத்த த்ரில்லர் வெற்றி உற்சாகத்தையும், அணி மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது.

இலங்கையின் இந்த வெற்றி மூலம் அனைத்து இரசிகர்களும் களிப்புற்று வரும் இத்தருணத்தில் இலங்கை அணிக்கும், இலங்கையின் வெற்றிக்கு பெரும்பங்காற்றிய சுழல் வீரர் ரங்கன ஹேரத்துக்கும் கிரிக்கெட் உலகில் பிரபலமானவர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் நாட்டின் தலைவர் ஆகியோரிடமிருந்து சமூக வலைதளமான  டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார இலங்கை அணியின் வெற்றிக்கு தலைமை தாங்கிய தினேஷ் சந்திமாலையும், ஹேரத்தையும் முதலில் வாழ்த்தியிருந்தார்.

இன்னும் ரங்கன ஹேரத் பற்றி குமார் சங்கக்கார வல்லுனரான ஹேரத்தின்உன்னதமான அடைவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். அவரிடம் இன்னும்குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது விளையாடக்கூடிய ஆற்றல் உண்டு  எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது உள்ளூர் T-20 அணிகளின் பயிற்றுவிப்பாளராக வலம்வரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, தன்னோடு சக அணி வீரராக செயற்பட்ட ரங்கன ஹேரத்தை வாழ்த்தியுள்ளதோடு இலங்கை அணியின் ஒருங்கிணைந்த முயற்சிக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Well done boys 👏👏 credit to everyone for a fantastic team effort. @HerathRSL vintage performance buddy! 👍
இலங்கை அணியின் தலைவர் பொறுப்பினை அண்மையில் இராஜினாமா செய்த அஞ்செலோ மெதிவ்ஸ், காயம் காரணமாக பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாத நிலைக்கு ஆளாகியிருந்தார். எனினும், முதலாவது டெஸ்ட் போட்டியின் வெற்றி பற்றி டுவிட்டர் மூலம் கருத்து வெளியிட்ட மெதிவ்ஸ், இப்படியான வெற்றி ஒன்றுடன் 400ஆவது விக்கெட்டையும் ரங்கன ஹேரத் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சியான விடயம் எனக் குறிப்பிட்டு சந்திமாலையும் இலங்கை அணியினையும் பாராட்டியிருந்தார்.
What a win!!what a way to bring up 400 @HerathRSL take a bow legend.wel led @chandi_17 great effort whole team deserves every bit of it.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.