இலங்கை அணிக்கு எதிரான பாகிஸ்தான் ஒருநாள் குழாம் அறிவிப்பு



ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்துபோட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்டபாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தெரிவுக் குழுவின் தலைவர் இன்சமாம் உல் ஹக், அவ்வணியின்பயிற்சியாளர் மிக்கி ஆதர் மற்றும் அணித் தலைவர் சர்பராஸ் அஹமட் ஆகியோரின்பங்குபற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளஇக்குழாமில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், அனுபவமிக்க வீரருமானஅசார் அலிக்கு ஓய்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்தசில தினங்களான உபாதையினால் அவதிப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளஅசார் அலி, மீண்டும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


கடந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் தொடரின்பிறகு அணித் தலைமையிலிருந்து அசார் அலி பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டஅசார் அலி, சம்பியன் கிண்ணத் தொடரில் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காகவிளையாடியிருந்தார்.

அத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய அசார் அலி, இந்திய அணியுடனானஇறுதிப் போட்டியில் அரைச்சதம் குவித்து பாகிஸ்தான் அணிக்கு முதற்தடவையாகசம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார். எனினும், தெரிவுக்குழுத் தலைவராக இன்சமாம் உல் ஹக் தொடர்ந்து அசார் அலியைஅணியிலிருந்து நீக்கி வருவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் குற்றம் சுமத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அசார் அலிக்குப் பதிலாக, பாகிஸ்தான் உள்ளூர் போட்டிகளில்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 21 வயதான இளம் வீரர் இமாம் உல் ஹக்முதற்தடவையாக பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இடது கைதுடுப்பாட்ட வீரரான இமாம், பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட ஜாம்பாவானும், தற்போதைய தெரிவுக் குழுவின் தலைவருமானஇன்சமாம் உல் ஹக்கின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 வருடங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிகளவுஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ள இமாம் உல் ஹக், நடப்பாண்டு உள்ளூர் போட்டிகளில் இரட்டைச் சதம் மற்றும் 3 சதங்கள் உள்ளடங்கலாக49.88 என்ற சராசரியுடன் 848 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அத்துடன் இதுவரை 31 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இமாம், 4 சதங்கள் உள்ளடங்கலாக 1,744 ஓட்டங்களைக் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேலும், அண்மைக்காலமாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத அனுபவமிக்க வீரரானமொஹமட் ஹபீஸ் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பியன்ஸ்கிண்ணத்தில் இடம்பெற்ற வஹாப் றியாஸுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படிஜுனைத் கான் பாகிஸ்தான் அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடும்வாய்ப்பினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் அணித் தேர்வு குறித்து பாகிஸ்தான் தெரிவுக்குழுவின் தலைவர்இன்சமாம் உல் ஹக் கருத்து வெளியிடுகையில், ”சம்பியன்ஸ் கிண்ணத்தில்பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற அசார் அலிக்கு உபாதை காரணமாக ஓய்வினைவழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் காரணமாக உள்ளூர் போட்டிகளில்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற இளம் வீரரொருவருக்கு பாகிஸ்தான் ஒரு நாள்அணியில் வாய்ப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, 21 வயதுடையஇமாம் உல் ஹக் முதற்தடவையாக அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். கணுக்கால்காயம் காரணமாக வஹாப் ரியாஸிற்கு ஓய்வினை வழங்குவதற்கு நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்டஒரு நாள் தொடர் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரைநடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் ஒரு நாள் குழாம்

சர்பராஸ் அஹமட் (அணித் தலைவர்), அஹமட் ஷேசாத், பக்கர் ஷமான், மொஹமட் ஹபீஸ், பாபர் அசாம், சொஹைப் மலிக், இமாத் வசீம், சதாப் கான், பாஹிம் அஷ்ரப், ஹஸன் அலி, மொஹமட் ஆமிர், ரும்மான் ரயிஸ், ஜுனைத் கான், ஹரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.