இந்திய அணியின் தல என செல்லமாக அழைக்கப்படும் தோனி போட்டியை முடிப்பதில் 1000 பாண்டியாவுக்கு சமம் தல தோனி


போட்டியை முடிப்பதில் 1000 பாண்டியாவுக்கு சமம் தல தோனி

இந்திய அணியின் தல என செல்லமாக அழைக்கப்படும் தோனி, இளம் வீரர் பாண்டியாவை விட 1000 மடங்கு உயர்ந்தவர் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்துவரும் ஹர்திக் பாண்டியா அண்மையில் நடைப்பெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி அனைவரின் பாரட்டையும் பெற்று வருகின்றார்.

அவர் விளையாடிய சில போட்டிகளிலேயே கபில் தேவ், தோனி போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்திய அணியின் பெஸ்ட் ஃபிணிஷர் என போற்றப்படும் தல தோனியைப் போல, ஹர்திக் பாண்டியா முன்னேறி வருகிறார் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1000 பாண்டியாவுக்கு சமம்:

பாண்டியாவை தோனியுடன் ஒப்பிடுவது குறித்து கர்சன் காவ்ரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தயவு செய்து தோனியுடன் பாண்டியாவை ஒப்பிட வேண்டாம். பாண்டியா வளர்ந்து வரும் வீரர். அவரின் திறமை அபாரம்.

சிறப்பாக வளர்ந்து வரும் பாண்டியாவை வாழ்த்தலாமே தவிர, இப்படி ஒப்பிட்டு பேசி அவரின் திறமைக்கு தடையாக அந்த வார்த்தைகள் அமைந்து விடக் கூடாது.

தோனி ஏற்கனவே 3 உலகக் கோப்பைகளை வென்றும், பேட்டிங், கீப்பிங் என பல சாதனைகளைப் படைத்து நிரூபித்து காட்டியவர். அவரின் மேட்ச் ஃபிணிஷிங்கை யாருடனும் ஒப்பிட முடியாது.

தோனி தற்போதும் தன் முழு திறமையை நிரூபித்து 1000 பாண்டியாவுக்கு சமமாக உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.