நான்கு ஓட்டங்களால் இரட்டைச் சதத்தைத் தவறவிட்ட கருணாரத்ன!!



பாக்கிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்றைய தினம் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 482 ஓட்டங்களைப் பெற்றனர்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இன்றும் களத்தில் இருந்த டிமுத் கருணார்த்தன 196 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். மேலும் இலங்கை அணி சார்பில் 12வது வீரராக கருணாரத்ன தனது 3௦௦௦ ஓட்டங்களை இன்று பூர்த்தி செய்தார்.

சந்திமால் 62 ஓட்டங்களுடனும், டிக்வெல 52 ஓட்டங்களுடனும், டில்ருவான் பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்று இலங்கை அணியின் ஓட்ட எண்ணிகையை உயர்த்த உதவி செய்தனர்.

பந்துவீச்சில் யசிர் ஷா ஆறு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் இன் இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களைப் பெற்றனர்.

தற்பொழுது களத்தில் மசூட் மற்றும் அஸ்லாம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.