T20 போட்டிகளிலும் கோஹ்லியின் சாதனைப் பட்டியல் தொடர்கிறது…! (முழுமையான சாதனைகள் உள்ளடக்கம்)


இந்தியா கிரிக்கெட் அணியின் தலைவர் கோஹ்லி, நவீன கிரிக்கெட் உலகில் முடிசூடா மன்னனாகவே திகழ்ந்து வருகின்றார்.
அதுவும் தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்வதில் கோஹ்லியின் துடுப்பாட்ட பங்களிப்பென்பது மிக அதிகமாகவே இருந்து வருகின்றது.
T20 போட்டிகளின் வெற்றிநோக்கி துடுப்பாடுகையில் (Chasing) ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிகப்படியான ஓட்டங்கள் எனும் சாதனையை கோஹ்லி புதிதாக படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் மக்கலம் பெற்றுக்கொண்ட 1006 ஓட்டங்கள் சாதனையை கடந்து, கோஹ்லி 1007 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
அத்தோடு T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் பிரெண்டன் மக்கலம் (2140),இலங்கையின் டில்ஷான் (1889) ஆகியோயரை அடுத்து கோஹ்லி (1807*) 3 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சேசிங் செய்கின்ற போது டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லியின் சராசரி 61.41 ஆகவும் , ஒருநாள் போட்டிகளில் 67.10 ஆகவும், T20 போட்டிகளில் 84.66 ஆகவும் காணப்படுகின்றது.
இலங்கை அணிக்கெதிராக நேற்றைய போட்டியில் கோஹ்லி பெற்றுக்கொண்ட அரைச்சதம் 17 வது அரைச்சதம் என்பதோடு இலங்கை அணிக்கெதிரான 4 வது தொடர்ச்சியான அரைசதமாகும்.அத்தோடு T20 போட்டிகளில் அதிக தடவைகளான 6 தடவைகள் கோஹ்லி தொடர் நாயகன் விருதுகளையும் வென்றெடுத்துள்ளார்.
அத்தோடு மாத்திரமல்லாமல் வேகமாக 15,000 சர்வதேச ஓட்டங்கள் பெற்றவர் எனும் உலக சாதனையையும் கோஹ்லி தனதாக்கினார்.வெறுமனே 333 இன்னிங்ஸ்களில் கோஹ்லி இந்த மைல்கல்லை எட்டினார்.
336 இன்னிங்ஸ்களில் ஹாசிம் அம்லாவும் ,344 இன்னிங்ஸ்களில் விவ் ரிச்சர்ட்ஸும் இந்த சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.