இலங்கையில் இடம்பெற்ற அபாயகரமான விபத்து!



கடந்த வாரம் இலங்கையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று கவனம் செலுத்தியுள்ளது.

அதிவேகமாக வந்த கார் ஒன்று பயணிகள் நிறைந்த பஸ் ஒன்றை கணப்பொழுதில் புரட்டித் தள்ளிய அதிர்ச்சி காணொளி ஒன்றை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2ம் திகதி மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 பல்கலைக்கழக மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் வெளியாகியுள்ள சீ.சீ.டீ.வி காணொளிக்கமைய, வேகமாக காரை ஓட்டி வந்த சாரதிக்கு அதனை நிறுத்திக் கொள்ள ஒரு நொடியேனும் நேரம் காணப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

அந்த நிலையில் கார், பயணிகள் பஸ் மீது மோதியதினால் பஸ் பல அடி தூரத்திற்கு பறந்து சென்று புரண்டுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விபத்தின் பின்னர் அருகில் இருந்த சீ.சீ.டீ.வி கமராவில் விபத்தின் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதேவேளை, விபத்திற்கு காரணமாக இருந்த காரின் முன் பக்கம் முழுமையாக தேசமடைந்துள்ளது.

மொத்தமாக 65 பேர் அந்த பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைத்து கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து தொடர்பில் கார் மற்றும் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.