வெள்ளையடிப்பு செய்வதில் புதிய உலக சாதனை படைத்த இந்தியா…!




வெள்ளையடிப்பு செய்வதில் புதிய உலக சாதனை படைத்த இந்தியா…!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடர் நேற்றைய T20 போட்டியோடு நிறைவுக்கு வந்துள்ளது.

டெஸ்ட், ஒருநாள் , T20 போட்டிகள் கொண்டதான தொடருக்காக இலங்கை வந்த விராட் கோஹ்லி தலைமையிலான இந்தியா, பலவித சரித்திரபூர்வ சாதனைகளுடன் தொடரை நிறைவு செய்துள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்றும், ஒருநாள் தொடரை 5-0 என்றும், T20 தொடரை 1-0 என்றும் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

ஒரு நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட அணியொன்று, குறித்த அணியொன்றை அனைத்துவகையான போட்டிகளிலும் முழமையாக வெள்ளையடிப்பு செய்தமை இதுவே முதல்முறையாகும் .

2011 ம் ஆண்டில் பாகிஸ்தான் அணி, சிம்பாபே சுற்றுலாவின் போதும், 2011 -2012 காலப்பகுதியில் அதே பாகிஸ்தான் அணி , பங்களாதேஷ் சுற்றுலாவை மேற்கொண்ட போதும் அந்த அணிகளை அதன் சொந்த மண்ணில் வைத்து 6-0 என்று வெற்றிகொண்டதே இதுவரையான உலக சாதனையாகும்.

அந்த சாதனையை முறியடித்து இந்திய அணி, இலங்கை அணியை இலங்கை மண்ணில் வைத்து 9-0 என்று வெற்றிகொண்டு சாதித்துள்ளது.

மொஹமட் யூசுப் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கான சுற்றுலாவை 2009 /10 காலப்பகுதியில் மேற்கொண்டபோது இதேபோன்று அனைத்து போட்டிகளிலும் ரிக்கி பொண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியிடம் அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் மண்கௌவியது.
டெஸ்ட் போட்டிகளில் 3-0 என்றும், ஒருநாள் போட்டிகளில் 5-0 என்றும், ஒற்றை T20 போட்டியில் 1-0 என்றும் தோற்றுப்போனது.

ஆயினும் ஆஸ்திரேலிய அணியின் இந்த உலக சாதனையானது அதன் சொந்த மண்ணில் படைக்கபட்டதாகும்,இந்திய அணி அதனையும் கடந்து ,இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் இவ்வாறு வரலாற்றில் இல்லாதவாறு 9-0 என்று வெற்றிகொண்டுள்ளமை ஒரு உலக சாதனையாகும்.

vilaiyattu
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.