இலங்கை T-20 அணியில் மீண்டும் தசுன் சானக்க, இசுரு உதான


இம்மாதம் 6ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கெதிரான T-20 போட்டியில் விளையாடவுள்ள இலங்கை அணிக் குழாத்தில் இசுரு உதான மற்றும் தசுன் சானக்க ஆகிய வீரர்களை தேசிய அணியின் தேர்வாளர்கள் இணைத்துள்ளனர்.

இரும்புக்கர சகல துறை வீரரான தசுன் சானக்க இதுவரையில் 12 T-20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். பெப்பரவரி மாதம்அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது T-20 போட்டியில் இறுதியாகபிரசன்னமாகிய அவர் இரண்டு விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார்.



அதேபோன்று, 2009ஆம் ஆண்டு அறிமுகமான இடதுகை மித வேகப்பந்துவீச்சாளரான இசுரு உதான குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டியில்அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவராகக் காணப்படுகின்றார். இதுவரையில்8 T-20 சர்வதேச போட்டிகளில் ஆடியிருக்கும் உதான 9 விக்கெட்டுக்களைசாய்த்துள்ளதுடன், 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்த சிறப்புப்பந்து வீச்சினையும் கொண்டுள்ளார். இவர் இறுதியாக ஜனவரி மாதம்நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான T-20 தொடரில்பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடரையும் 3-0 என பறிகொடுத்து தற்போது ஒரு நாள் தொடரிலும் 5-0 என இந்தியாவினால் வைட் வொஷ் செய்யப்பட்டிருக்கும் இலங்கை,நடைபெறவிருக்கும் T-20 போட்டியில் சவால் மிக்க இந்தியாவிற்கு எதிராகமுதல் வெற்றியினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thepapare
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.