இந்தியாவில் 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மஹாராஷ்டிரா, புனே மாவட்டத்தில் உள்ள சிங்காகட் கோட்டைக்கு நிறை மாத கர்ப்பிணியான ப்ரநிதா, தனது கணவர் லாஹு இன்வேல் உடன் சென்றுள்ளார்.
கோட்டையின் மீது ஏறிய ப்ரநிதா, உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்ற போது தவறி, 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக கீழே உள்ள தடித்த புதர்கள் மேல் அவர் விழுந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
அழுகை சத்தம் கேட்டு சம்பவயிடத்திற்கு விரைந்த உள்ளூர் மக்கள் சிறிய காயங்களுடன் இருந்த ப்ரநிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
நிறைமாத கர்ப்பிணியான ப்ரநிதாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவரது குழந்தைக்கும், அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.