பெரும் அசிங்கத்தில் இருந்து தப்பித்தது இலங்கை !!


2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி நேரடியாக தகுதி பெற்று பெரும் அசிங்கத்தில் இருந்து தப்பித்துள்ளது. 

அண்மையில் இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள், ஒரு டி20 போட்டி என அனைத்திலும் வென்று அசத்தியது.

இந்த போட்டித் தொடரில், ஒருநாள் போட்டியில் 2 போட்டிகளிலாவது இலங்கை வெல்ல வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், தரவரிசையில் பின்னடைவு அடைந்து இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு நேரடி தகுதி பெற முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.


அப்படி இல்லையெனில், இலங்கைக்கு அடுத்து உள்ள விண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைப்பெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட தொடரை முழுவதுமாக வெல்ல வேண்டும்.

அப்படி வெல்லும் பட்சத்தில் ஒருநாள் தொடர் தரவரிசையில் 8வது இடத்தை பிடிக்கும். விண்டீஸ் அணிக்கு நேரடி வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று நடந்த விண்டீஸ் அணி எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இலங்கை அணி உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.