கண்டி, கன்னோருவ பிரதேசத்தில் நேற்று கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு சர்ச்சையில் நிறைவடைந்திருக்கின்றது.
இது தொடர்பில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி – கொழும்பு வீதியில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில், மணமகளின் ஒசரி புடவையை பிடித்து கொண்டு வெயிலில் நின்றமையே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்து கொண்டிருந்தார். அவர் தனது பெயரில் ஆரம்பித்த அலவத்துகொட ஆரம்ப பாடசாலையின் மாணவர்களுடனே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்த திருமணத்தின் காரணமாக வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுவதற்காக பேராதனை பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை இதற்காக அணிந்துள்ள நிலையில் அது இன்னமும் உத்தியோகபூர்வமாக கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.