2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள 8 அணிகள்



நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

இதற்கு, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டுமே நேரடித்தகுதி பெறுவதற்கான வாய்ப்பை பெறும். மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றில் பங்கேற்கும்.


அதன்படி, 119 புள்ளிகளுடன் தென்னாப்ரிக்க அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

118 புள்ளிகளுடன் 2 முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

5 முறை உலகச்சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளது.

113 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் நேரடி தகுதி பெற்றுள்ளது.

111 புள்ளிகளுடன் தென்னாப்ரிக்கா 5வது இடத்திலும், 95 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளது.

94 புள்ளிகளுடன் வங்கதேச அணி 7வது இடத்திலும், 86 புள்ளிகளுடன் இலங்கை 8வது இடத்திலும் உள்ளது.

தற்போது, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இங்கிலாந்து உடன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால், இரண்டு முறை உலகச்சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்கோப்பை தொடருக்கு நேரடித் தகுதி பெறும் வாய்ப்பை நழுவ விட்டது.

தகுதிச்சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஜிம்பாப்வே, உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன. இதிலிருந்து 2 அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.