( வீடியோ ) டாஸ் குளறுபடியும் நேற்று இலங்கை தோல்விக்கு காரணம்.. வைரல் வீடியோ





Hassim Mohemed Naleem
-

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு இருபது போட்டியின் போது நாணய சுழற்சியில் இலங்கை அணியே வெற்றிப் பெற்றதாகவும், அதை இந்திய அணிக்கு வழங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


நேற்று போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் வர்ணனையாளர் முரளி கார்த்திக்கால் இந்த நாணய சுழற்சி மேற்கொள்ளப்பட்ட போது, உபுல் தரங்க நாணத்தை சுழற்றிய வேளையில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தலையென (HEAD) என கோரினார்.


பின்னர், போட்டி தீர்மானிப்பாளரான எண்டி பைக்ரொப்ட் பூ (TAIL) என அறிவித்து உபுல் தரங்கவை நோக்கி கையை காட்டினார். எனினும், மீண்டும் அவர் எதையோ கூற முயற்சித்த போதும், வர்ணனையாளரான முரளி கார்த்திக் தலை (IT'S HEAD) என அறிவித்து கோலி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.


நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் முதலில் களத்தடுப்பினை தெரிவுசெய்தார். எனினும்,இலங்கை அணித்தலைவர் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்றிருந்தால் முதலில் களத்தடுப்பினை தெரிவுச்செய்யவே இருந்ததாக வர்ணணையாளரிடம் தெரிவித்திருந்தார்.


குறித்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. இருபதுக்கு20 போட்டிகளின் போது நாணய சுழற்சியின் வெற்றியானது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை இந்த குளறுபடி தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வீடியோவுடன் செய்தியி பகிர்ந்து வருகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது.


                
madawalanews


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.