இலங்கைஇலங்கையின் தொடர் தோல்விகளால் வர்ணனையாளர் அறையில் கஷ்டப்படுகிறாரா? : மனம் திறந்தார் ஆர்னல்ட்…!யின் தொடர் தோல்விகளால் வர்ணஇலங்கையின் தொடர் இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் வர்ணனையாளர் அறைக்குள் தான் பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரொஷல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி கலந்துக்கொள்ளும் போட்டிகளில் இலங்கை அணியை வலிமைப்படுத்தும் வகையில் ரொஷல் ஆர்னல்ட் வர்ணனை செய்வது வழக்கம். இது தொடர்பில் தற்போது இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது. இதன்போது இலங்கை அணி தொடர்பில் வர்ணனை செய்யும் போது எவ்வாறான சவால்களை எதிர்கொள்கிறார் என்பது தொடர்பில் பிபிசி இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,
“இலங்கை அணி தொடர்பில் வர்ணனை செய்யும் போது மிகவும் கடினமாக உணருகிறேன். நாம் எப்பொழுதும் இலங்கை அணியின் தவறுகனை சுட்டிக்காட்டாமல், நல்ல விடயங்கள் தொடர்பிலும், வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வர்ணனை செய்கிறோம். ஆனால் வீரர்களின் திறமை சரியாக வெளிப்படாத போது நாம் வர்னணை அறையில் மிகவும் கடினமான நிலைக்கு தள்ளப்படுகிறோம்.
இலங்கை அணியை பொருத்தவரையில், அணியின் திறமைக்கு ஏற்ப விளையாடவில்லை என்றுதான் கூறவேண்டும். அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தங்களது திறமைகைளை அறிந்து, அடுத்தது நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும். வீரர்கள் புரிந்துக்கொண்டு செயற்பட்டால் அணியை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும்.
ஏனைய நாட்டு கிரிக்கெட் விமர்சகர்களை பொருத்தவரையிலும் இலங்கை அணி வீரர்களால் இன்னும் சிறப்பாக செயற்படமுடியும் என்ற கருத்து நிலவிவருகின்றது. வீரர்கள் சிறு சிறு தவறுகளை நிவர்த்திசெய்யும் போது அணி பலமான அணியாக உருவாகும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தோல்விகளால் வர்ணனையாளர் அறையில் கஷ்டப்படுகிறாரா? : மனம் திறந்தார் ஆர்னல்ட்…!னையாளர் அறையில் கஷ்டப்படுகிறாரா? : மனம் திறந்தார் ஆர்னல்ட்…!

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.