மன்னிக்கவும், தலைப்பை மட்டும் வாசிக்கும் வாசகர்களுக்கான கட்டுரையல்ல இது.
சேவைகளை மட்டும் தமது முழுநேரப் பணியாக செய்த நேர்மையான சமூகத் தலைவர்கள் எம்மவிட்டுப் பிரிந்துவிட்டார்கள் நேற்று, வியாபார நோக்கில் அரசியல் செய்யும் குறுநில மன்னர்களைதான் இப்போது நாம் அரசியல் தலைவர்களாக தோலில் தூக்கி மாலைபோட்டு அழங்கரித்துவருகின்றோம்.
பல இலட்சம் ரூபாய் செலவில் விளம்பரங்கள் செய்து, பல கட்சி உறுப்பினர்களின் அன்றாட தொழில் நேரங்களை வீணடித்து, பாதைகளை மூடி, பல பொலிஸ் உத்தியோத்தர்களின் சங்கிளித்தொடர் பாதுகாப்புடன் தலைவர் வருகிறார்.................... எதுக்கு...? அடிக்கல் நாட்டு விழாவுக்கு தான்.
இத்தனை செலவுக்கு பின் நாட்டப்பட்ட 'அடிக்கல்' சில காலங்கள் பின்னால் அடியோடு காணமல் போய் அரசியல்வாதிகளுக்கும் அவர் கட்சிக்கும் அடிமனதிலிருந்து மறந்து போய்விடுகிறது. பாடசாலை, பல்கலைக்கழம், துறைமுகம் என்று பெரும் திட்டங்களை நம் சமூகத்திற்கு சேவையாகச் செய்து தந்துவிட்டு மறைந்த தலைவர்கள் அடிக்கள் நாட்டு விழாக்களை கவனத்தில்கொண்டதில்லை தங்கள் அரசியல் வாழ்வில்.
30 வருடங்கள் கடந்தும் அகதியாக வாழும் நம் சமூகத்திற்கு ஒரு மலசல கூடத்தையாவது நிர்மாணித்துத் தரமுடியாத தலைவர்கள் முழு நாட்டு மக்களுக்கும் கக்கூஸ் கட்டப் போவதாக கதை விடுவது எவ்வளவு அபத்தமான வார்த்தை.....?
தளபாடங்கள், ஆசிரியர்கள் இல்லா பாடசாலைகளில் நம் குழந்தைகள் கல்வி கற்கும் இந்த நிமிடத்தில் கல்முனையை துபாய் போன்று மாற்றுவேன் என்று வார்த்தையின் / வாக்கின் விபரீதம் தெரியாது வாய் திறந்து வாக்களித்த மக்களை மடயர்களாக்கும் முயற்சி ஒரு சமூகத்துரோகமான செயலாகும்.
வீண் செலவுகளை ஏற்படுத்தும் அடிக்கல் நாட்டு விழாக்களை மறந்துவிட்டு சமூகத்தின் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு ஏற்றாற் போல் சேவைசெய்ய ஒன்றிணையுமாறு தம் தலைவர்களை அன்பாய் அழைக்கின்றேன். மாற்றங்கள் தேவை / இஸ்ஸதீன் றிழ்வான்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.