பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகேபி.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தாஸ்.
இவரது மகன் முரளி பொம்மிடியில் உள்ள தனியார் கார்மென்ட்சில் பணியாற்றி வருகிறார்.
இவர் சாகிரா என்ற பெண்ணை, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சந்துரு மற்றும் லூர்து என்ற இரணடு மகன்கள் உள்ளனர்.
இதனிடையே கணவன் மனைவி இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் விரக்தியடைந்த முரளி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை, தனது 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு, தானும் குடித்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த மூவரையும் மீட்ட சாகிரா, பொம்மிடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்று உயிரிழந்தான்.
மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.