இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான நேற்றைய ஒருநாள் போட்டி தோனிக்கு 300வது ஒருநாள் போட்டி ஆகும்.
ஆனால் இந்த போட்டியில் நேற்று மலிங்கா 300வது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் 300 விக்கெட்டுக்களை கைப்பற்றிய 4வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்னர் முரளிதரன், வாஸ், ஜெயசூர்யா ஆகியோர் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
நேற்று கேப்டனாக செயல் பட்ட மலிங்கா தனது ஒரு நாள் போட்டியில் 300 விக்கெட்டை வீழ்த்தியபோதும் மகிழ்ச்சியாக இல்லை.
இதுகுறித்து மலிங்கா கூறியபோது, ‘ ’300 விக்கெட் எடுத்ததில் மகிழ்ச்சி. அது வெறும் எண்ணிக்கைதான்.
ஆனால் போட்டியில் தோற்றது துரதிருஷ்டமானது. கடந்த 5 போட்டிகளில் நாங்கள் 250 ரன்களை கூட தொடவில்லை.
இளம் வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள்.
ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர்களுக்கு அனுபவம் தேவையாக இருக்கிறது.
அடுத்த சில மாதங்களில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.