ஏ.ஆர்.எம்.ரபியுதீன் ஊடகவியலாளர் – நாச்சியாதீவு
தொழில்: வட மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விணப்பங்கள் கோரப்பட்டு ,போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்
பரீட்சைகளின் பின் தெரிவு செய்யப்பட்டவர்கள் இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளையும் ,உயர் தேசிய டிப்ளோமா தாரிகளையும் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதம் வழங்கும் விசேட நிகழ்வு நாளை 25 திங்கள் இடம்பெறுகின்றது .
நாளை மு.ப 10.00 மணிக்கு பொலன்னறுவையில் அமைந்துள்ள ரோயல் கல்லூரியில் வைத்து வ .ம.மாகாண முதலமைச்சரும் ,கல்வி அமைச்சருமான பேசல ஜயரத்ன பண்டார தலைமையில் நடைபெறவுள்ள விழாவின் போது நியமனத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே தபாலில் இடப்பட்டுள்ளதாக வ.ம.மாகாண பிரதான அமைச்சு தெரிவிக்கின்றது .
474 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நியமனம் வழங்கும் இன்றைய நிகழ்வில், 200 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் புதிதாக இன்று நியமனம் பெறுகின்றனர் .

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.