21 வயது மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 70 வயது சாமியார் கைது





ராஜஸ்தானின் ‘ஃபலஹரி பாபா’ (70) என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். கௌஷ்லேந்த்ர ப்ரபன்னாச்சார்யா மஹராஜ் என்ற இவர், பழங்களை மட்டுமே உண்டு வருவதாலேயே அவரை ஃபலஹரி பாபா என்று அழைக்கின்றனர்.


இவர், தனது ஆச்சிரமத்தில் வைத்து, தனது பக்தர் ஒருவரின் மகளான 21 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரிய கிரகணமான கடந்த ஏழாம் திகதி, யாரையும் சந்திக்க மறுத்த இந்தச் சாமியார், குறித்த பெண்ணை மட்டும் தன்னுடைய பிரமாண்ட ஆச்சிரமத்தில் தங்க வைத்துக்கொண்டார்.

அன்றிரவு அந்தப் பெண்ணை தன் அறைக்கு அழைத்த அவர், அங்குவைத்து அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதுபற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார். அந்த எச்சரிக்கைக்குப் பயந்த அந்தப் பெண் அது பற்றி வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், மற்றொரு சாமியாரான குர்மீத் ராம் ரஹீம் கைதாகி குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டதையடுத்து மௌனம் கலைத்த அந்தப் பெண், நடந்த அத்தனையையும் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

பல வருடங்களாக ஃபலஹரியின் பக்தர்களாக இருந்தபோதும் அந்தப் பெற்றோர்கள், சற்றும் தயங்காமல் உடனடியாக பொலிஸில் புகாரளித்தனர்.

அதன் பேரில், மூன்று நாட்களாக சாமியாரை விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

அவரை பதினைந்து நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.