பெங்களூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவியின் ஆடைகளை ஆசிரியர் ஒருவர் களைந்து பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
இதனால் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.பெங்களூரில் 12 வயதான மாணவி ஒருவர் பள்ளிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார்.
அப்போது அந்த பள்ளிவளாகத்தில் இருந்த 28 வயதான உடற்பயிற்சி ஆசிரியர் அந்த மாணவியை கண்டித்துள்ளார்.
பிறகுஅந்த மாணவியை தனியாக அழைத்து சென்று அவரது ஆடையை களைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனையடுத்து பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற அந்த மாணவி மிகவும் சோர்வுடன் காணபட்டுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த மாணவியின் தாய் அவரிடம் விசாரித்த போது மாணவி நடந்த சம்பவத்தை கூறினார்.
இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் தாய் பள்ளிக்கு சென்று ஆசிரியையிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் அந்த ஆசிரியை அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று மறுத்தார் .
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து அந்த பள்ளியில் விசாரணை நடத்திய போலீசார் அந்த ஆசிரியர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.