நடிகர் விஜய்யின் மெர்சல் பட டீஸர் இந்த வாரம் வெளியாக வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது.
சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அட்லீ இந்த மாத இறுதியில் மெர்சல் டீஸர் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான அஜித்தின் விவேகம் படம் பல எதிர்மறையான கருத்துகளை சந்தித்து வருவது குறித்து அந்த படத்தின் எடிட்டர் ரூபன் தனது முகநூல் பக்கத்தின் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் விமர்ச்சனம் என்ற பெயரில் சிலர் காசிற்காக ஒரு படத்தை பற்றி தவறாக பேசுவதால் சில படங்கள் ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.

ஆனால் நடிகர் அஜித்,விஜய், இயக்குநர் அட்லி மற்றும் சிவா ஆகியோரின் ஆகியோரின் நல்ல எண்ணத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் மற்றொருவரின் உழைப்பை மிகவும் மதித்து வேலை செய்கின்றனர்.
தன் படத்தின் டீசர் வருவதால் மற்றொருவரின் படம் பாதிக்கப்பட கூடாது என்று பார்த்து பார்த்து வேலை செய்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விவேகம் படம் ரிலீசாகி இருக்கும் நிலையில் மெர்சல் பட டீசர் வெளியானால் அப்படத்தை பாதிக்கும் என்பதால் டீசர் வெளியிடப்படப்படுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தெரியவந்துள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.