தல தோனி என் கூட இருக்கப்ப நான் எவனுக்கு பயப்படனும் ; புவனேஷ்வர்குமார் !!











தோனி கொடுத்த நம்பிக்கையால் தான் இலங்கை அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தன்னால் சிறப்பாக விளையாட முடிந்ததாக புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி.20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.


இதில் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 131 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்ததாக களமிறங்கிய புவனேஷ்வர்குமார், மறுமுனையில் இருந்த தோனியுடன் சேர்ந்து இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்து 53 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணியின் மலிங்கா பந்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே விளையாடியதாக புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய தனஞ்செயா பந்தை எதிர்கொள்வது தனக்கு சிரமமாக தெரியவில்லை என்றும், மலிங்காவின் பந்துவீச்சில் இருந்து தப்பிப்பது பற்றி மட்டுமே தான் யோசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.