இறக்குவாணை மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்



இரத்தினபுரி - இறக்குவாணை - படேயாய பிரதேசத்தில் உயர்தர மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.


மெல்மடுல்ல மேலதிக நீதவான் சரத் விஜேகுணவர்தன இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை , கொலை தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றது.


இதன்போது , மாணவி கொலை செய்யப்படும் முன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.


இந்த கொலை தொடர்பில் படேயாய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரையே காவற்துறை கைது செய்தது.


உயிரிழந்த மாணவியின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் , தனது தந்தையுடன் குறித்த மாணவி வாழ்ந்து வந்துள்ளார்.


இந்நிலையில் , நேற்று முன்தினம் தந்தை வீட்டில் இல்லாத நேரம் வீட்டினுள் நுழைந்த சந்தேகநபர் மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.


இதேவேளை , கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் கொலை தொடர்பில் இவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தார்.


நான் அழைப்பொன்றை மேற்கொண்டேன் , அப்போது ஆண் ஒருவர் பேசினார். நான் கேட்டேன் யார் பேசுவது என்று . அந்த நபர் போனை கட் செய்தார். மீண்டும் மீண்டும் அழைப்பை மேற்கொண்டேன். எல்லாவற்றையும் கட் செய்தார். பின்னர் கைப்பேசியை ஓப் செய்தார். அதனை தொடர்ந்து நான் மாமாவுக்கு அழைப்பை மேற்கொண்டு இது தொடர்பில் கூறினேன் என அந்த நபர் தெரிவித்திருந்தார்.

hirunews







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.