பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இந்த அடிப்படையில்தான் வழங்கப்படவுள்ளன?




தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன என்று அரசாங்க உத்தியோகபூர்வ இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனாலும் இந்த நியமனத்திற்கான விண்ணப்பங்கள் அரசாங்கத்தால் கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான முடிவுத் திகதியும் அடுத்த மாதம் எட்டாம் திகதி எனக் குறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று அரச இணையத்தளத்தில் வெளியான செய்தியால் பட்டதாரிகளிடையே தற்பொழுது பெரும் குழப்பம் நிலவிவருகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரை தொடர்புகொண்டு கேட்டபோது, பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் பட்டதாரிகளின் விபரங்களை அரசாங்கம் தம்மிடம் கோரியிருந்ததாகவும், இதன்படி 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பட்டம்பெற்ற 3004 பட்டதாரிகளின் விபரங்களை அரசாங்கத்திடம் தாம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதன்படி பட்டம்பெற்ற ஆண்டுகள் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கப்படலாம் என்றும் நியமனம் தொடர்பான மேலதிக விபரங்கள் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை உரிய தரப்பினரிடம் பெற்றுக்கொள்வதற்காக நாம் முயன்றுவருகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.