அவுஸ்ரேலிய அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பங்களாதேஷ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியில் இரண்டு வருடங்களுக்கு பிறகு சகலதுறை வீரரான நசிர் ஹொசைனுக்கு இடம் கிடைத்துள்ளது. அதேபோல் வேகப்பந்து வீச்சாளரான ஷபியுல் இஸ்லாம் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை முக்கிய வீரர்களான மெஹ்முதுல்லா மற்றும் மொமினுல் ஹாக் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான பங்களாதேஷ் அணி விபரம்: முஷ்பிகுர் ரஹிம் (அணித்தலைவர், விக்கெட் காப்பாளர்), தமிம் இக்பால்,இம்ருல் கெய்ஸ், லித்தோன் தாஸ், சவுமியா சர்கர், ஷாகிப் அல் ஹசன், சபீர் ரஹ்மான், முஸ்டாபிஜூர் ரஹ்மான், மெஹெதி ஹசன், தஸ்கின் அஹமட், மொகடெட் ஹொசைன், நசிர் ஹொசைன், ஷபியுல் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம்.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதியும், இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 4ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.