ஊரையே ஏமாற்றிய பெண் போலீஸ் Fake Lady Police. டிராபிக் கான்ஸ்டபிளிடம் மாட்டி அசிங்கப்பட்டார்?
உத்தரபிரதேசம் பைசாபாத்தை சேர்ந்தவர் சந்தியா திவாரி. பட்டதாரியான இவருக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே லட்சியம். இதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பைசாபாத் நகரில் போலீஸ் உடையில் ஸ்கூட்டியில் செல்லும்போது, சிக்னலை தாண்டி சென்றார்.
இதனை பார்த்த டிராபிக் போலீஸ் ஒருவர் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அவரிடம் கேட்டபோது தான் ஒரு போலீஸ் அதிகாரி என்னையே மடக்கி பிடிக்கிறாயா என மிரட்டினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த கான்ஸ்டபிள் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டார்.
ஆனால் அவர் காட்ட மறுத்து விட்டார். இதனால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது போலி பெண் போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் லக்னோவில் போலீஸ் வேலை கிடைத்துள்ளது என கூறி பைசாபாத்தில் வீடு பார்த்து குடியேறி உள்ளது தெரியவந்தது.
அதுமட்டும் அல்லாமல் போலீஸ் அதிகாரி போர்வையில் வியபாரிகளிடம் பணம் வசூல் செய்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.