காவத்தை, எந்தானை, கொடகும்புர பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரத்தில் பரீட்சைக்கு தோற்றி வரும் மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை நேற்றுமுன்தினம்(24) காலை வேலைக்கு சென்று விட்டு பகல் 2.00 மணியளவில் தமது வீட்டுக்கு வந்தபோது மகள் கழுத்து வெட்டப்பட்ட நிலையில வீட்டில் சடலமாக கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலியான யுவதியின் தாய் இறந்து ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆகியுள்ள நிலையில் இச்சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெல்மதுளை பதில் நீதவான் சரத் பிட்டகம்பல தலைமையில் மரண பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றது. மேலதிக பரிசோதனைக்காக சடலம் இரத்தினபுரி பொது வைத்தியாசாலையின் மரண பரிசோதனை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் குறித்து 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை இறக்குவானை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தினகரன்
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.