தோனி சொன்ன ஒரு வார்த்தை தான் என்னையும் பேட்ஸ்மேனாக மாற்றியது; புவனேஷ்வர்குமார் !!

இலங்கை அணிக்கு எதிரான வெற்றிக்கு தல தோனி கொடுத்த தைரியம் தான் காரணம் என்று புவனேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கையுடன் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு டி.20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.


இதில் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 54 ரன்களும், தவான் 49 ரன்களும் எடுத்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

ஆனால் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 131 ரன்களுக்கு இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்ததாக களமிறங்கிய புவனேஷ்வர்குமார், மறுமுனையில் இருந்த தோனியுடன் சேர்ந்து இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்து 53 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள புவனேஷ்வர்குமார் “தோனி கொடுத்த தைரியத்தால் தான் தன்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்ததாக” தெரிவித்துள்ளார்.

மேலும், தான் களமிறங்கியவுடன் தோனி தன்னிடம் வந்து, தேவையில்லாத நெருக்கடியை மூளை வரை கொண்டு செல்லதேவையில்லை, தைரியமாக விளையாடு என்று நம்பிக்கை கொடுத்ததாகவும் புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.