தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸிம்பாவே ஜனாதிபதியின் பாரியாரும் முதற்பெண்மணியுமான கிரேஸ் முகாபே, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார்.
ஹோட்டலொன்றில் 20 வயதான மொடல் அழகியொருவரை இவர் தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸில் சரணடைந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நேற்று (சனிக்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டது.
இருந்த போதிலும், தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொள்ளும் முகமாக இவர் அங்கு சென்றதால், நேற்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் ஆபிரிக்காவுக்கு இவர் சென்றுள்ள வேளையில், தப்பிச் செல்லாத வகையில் எல்லையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.