ரயில் விபத்துக்கு காரணம் என்ன? – கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு


உத்தரபிரதேசத்தில் அதி விரைவு ரயில் விபத்துக்கு ரயில்வே ஊழியர்களே காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்துக்கு மனித தவறே காரணம் என்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாலை முசாபர்நகர் பகுதியில் அதிவிரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 23 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தனர்.

குறித்த விபத்து தொடர்பில் நடைபெற்ற ஆரம்ப கட்ட விசாரணையின் போது, ரயில் தண்டவாளத்தில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் இது குறித்து ரயில் ஓட்டுனருக்கு தெரிவிக்கப்படாததே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.