கள்ளகாதலனுக்காக கணவனை கொன்று புதைத்த பாசக்கார மனைவி.! ஓசூரில் பயங்கரம்.
ஓசூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர் ஜஸ்டின். இவர் டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் விடுமுறையில் ஓசூருக்கு வந்துள்ளார். அதன்பிறகு ஜஸ்டின் 20ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் ரத்த கரைகள் படிந்திருந்ததை அருகில் இருப்பவர்கள் பார்த்து இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் ஜஸ்டின் மனைவி இந்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது கள்ளக்காதலன் லிண்டோ உதவியுடன் கொலை செய்து மத்திகிரி அருகில் உள்ள சுடுகாட்டில் புதைத்ததாக கூறினார்.
இதனை தொடர்ந்து சுடுகாட்டிற்கு மருத்துவர்களுடன் சென்ற போலீசார் உடலை தோண்டி அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.