சவுதி அரேபியாவில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், தங்கள் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் விடுதலை செய்ய அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசணை மேற்கொண்டு வருகின்றனர்.
சவுதி அரேபியாவில் கடந்த 5-ஆம் திகதி ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகள் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 11 அரச இளவரசர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் பொலிசாரினால் கைது செயப்பட்டனர்.
ஏனெனில் சமீபத்தில் மன்னர் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
இதனால் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலையீட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்களை முழுமையாக அரசிடம் ஒப்படைத்தால் அவர்களை விடுதலை செய்ய ஆலோசனை செய்வதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து சவுதி அரேபிய அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், கைது செய்யப்பட்ட 208 பேர் ஊழலின் மூலம் 100 பில்லியன் டொலருக்கு மேல் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.