கட்டுநாயக்க விமான நிலையத்தில் வியப்பை ஏற்படுத்திய வெளிநாட்டவர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று விநோத சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டு இளைஞர்கள் குழுவொன்று சாரம் அணிந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேற்கத்தைய நாகரீகத்தை கொண்ட வெள்ளை இனத்தவர்கள் சாரம் அணிந்து வந்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெர்சல் திரைப்படத்தில், நடிகர் விஜய்தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து பிரான்ஸ் செல்வது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மெர்சல் திரைப்படம் தற்போது பல நாடுகளில் பேசப்பட்டு வரும் நிலையில், அதன் காரணமாக ஈர்ப்பு கொண்ட இளைஞர்கள் இவ்வாறு சாரம் அணிந்து இலங்கை வந்திருக்கலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உங்கள் கருத்துக்கள்

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.