வங்கதேசத்திற்கு “மெர்சல்” காட்டிய மில்லர்…. அசுர வேக சதம் அடித்து மிரட்டல்



வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் தென் ஆப்ரிக்காவின் டேவிட் மில்லர் 35 பந்துகளில் அசுர வேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் இரண்டு டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.


இந்த தொடரின் முதல் டி.20 போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர் ஹசீம் ஆம்லா 85 ரன்கள் எடுத்து அபார துவக்கம் கொடுத்தார்.

மற்றொரு துவக்க வீரர் மங்கோலிஸா 5 ரன்னிலும், டுமினி 4 ரன்னிலும் டிவில்லியர்ஸ் 20 ரன்னிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய அந்த அணியின் அடுத்த அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லர் வங்கதேசத்தின் பந்துவீச்சை சிதறடித்து 35 பந்துகளில் 9 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் அசுர வேக சதமடித்து, டி.20 போட்டிகளில் குறைந்த பந்தில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த போட்டியின் 19வது ஓவரின் முதல் ஐந்து பந்துகளை தொடர்ந்து சிக்ஸருக்கு அனுப்பியும் ஒட்டுமொத்த மைதானத்தையும் மிரள வைத்தார்.

மில்லரின் அதிரடி ஆட்டத்தின் மூலம் வங்கதேச அணிக்கு 225 ரன்களை வெற்றி இலக்காக தென் ஆப்ரிக்கா அணி நிர்ணயித்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.