உடல்தகுதி தேர்வு புள்ளியில் விராட் கோஹ்லியின் ஸ்கோரை ஆஷிஷ் நெஹ்ரா நெருங்கியுள்ளதாக வீரேந்தர ஷேவாக் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆஷிஷ் நெஹ்ரா இடம்பிடித்துள்ளார்.
நாளை நடக்கும் இந்தியா- அவுஸ்திரேலியா டி20 போட்டியில் அவர் களமிறங்குவார் என தெரிகிறது.
நெஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டதற்கு சமூகவலைதளங்களில் பலர் கிண்டல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய அணி ஜாம்பவான் வீரேந்திர ஷேவாக் கூறுகையில், நெஹ்ரா சர்வதேச போட்டியில் விளையாடாவிட்டாலும் ஜிம்மில் தினமும் 8 மணி நேரம் செலவழித்தார்.
அதன் பலனாகவே அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய வீரர்களுக்கு நடந்த யோ-யோ உடல் தகுதி தேர்வில் அவர் 17-18 புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லியின் ஸ்கோரை அவர் நெருங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.