சங்கக்கார, மஹேலவை இன்று சந்திக்கிறார் அமைச்சர் தயாசிறி…!



இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று சந்திக்கவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டை மறுசீரமைக்கும் திட்டங்கள் தொடர்பில் கலந்து ஆலோசிப்பதற்காகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் திலகரட்ன டில்ஷான் ஆகியோர் அணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் இலங்கை அணி சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த தவறி வருகின்றது.

அதுமட்டுமல்லமால் மோசமான தோல்விகளை அணியால் தவிர்க்க முடியாமையனது இலங்கை அணிக்கு மிகவும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி தரப்படுத்தலிலும் இலங்கை அணியின் தற்போதைய பின்னடைவு மிகவும் மோசமானதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இலங்கை அணியை மீண்டும் ஒரு தலைசிறந்த அணியாக கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை கிரிக்கெட் சபையும், விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பான்களாகிய சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் உட்பட்ட 5 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை நியமித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

இதன்படி இலங்கை அணியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், அணியை வலுப்படுத்தும் பகுதிகள் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.