மட்டக்களப்பு சந்திவெளி சந்தையிலிருந்து வெளியேறும் முஸ்லிம் வியாபாரிகள்!




மட்டக்களப்பு சந்திவெளி சந்தையில் இன்றைய தினம் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையே பதற்ற நிலை ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சந்தையிலிருந்த முஸ்லிம் வியாபாரிகள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பாதுகாப்புக் கடமைக்கென பொலிஸார் இறக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துத் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் சந்திவெளி சந்தைக்கு அருகாமையில் “சந்திவெளி பொதுச் சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற வாசகம் கொண்ட பதாதைகள் சந்திவெளி இளைஞர்களினால் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து அப்பகுதியில் கலவரம் ஏதும் நேரலாம் என்ற காரணத்தினால் பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.


தமிழர்கள் வாழும் பகுதியான சந்திவெளி சந்தையில் தமிழர்களை போன்று முஸ்லிம்களும் பொருட்களை எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபடுவது வழக்கமாகும்.

வழமை போல் இன்றும் முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் பொருட்களை விற்பனைக்காக தயார் நிலையில் வைத்தபோது உள்ளுர்வாசிகள் உட்பட சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை உருவானது. இதையடுத்து முஸ்லிம் வியாபாரிகள் தமது பொருட்களுடன் சந்தையைவிட்டு வெளியேறியுள்ளர். இதனையடுத்தே சந்தையை அன்மித்த பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தபட்டள்ளனர்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலைய சந்தியில் பேருந்து தரிப்பிடம் அமைப்பது தொடர்பாக தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன் எதிரொலியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழ் பிரதேசங்களிலுள்ள சந்தைகளில் முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் வியாபார நடவடிக்கைளில் ஈடுபட பிரதேச மக்களினால் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை, ஓட்டமாவடி கிரான் ஆகிய பிரதேசங்களிலும் கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குடா, பாசிக்குடா பிரதேசங்களிலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான், முறக்கொட்டான்சேனை, சந்திவெளி, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடி மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களிலும் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.