ஹார்வியினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு கனடா உதவி வழங்குகின்றது!

யு.எஸ். மத்திய அவசர மேலாண்மை ஏஜன்சியிடமிருந்து கனடா அதிகார பூர்வமான வேண்டுகோள் ஒன்றை பெற்றுள்ளது. அதிகரித்து வரும் ஹார்வி சூறாவளியின் பின்விளைவுகளை சமாளிக்க தேவையான குழந்தைகளிற்கான சுகாதார பொதிகள் தலையணைகள் துவாலைகள் மற்றும் துணிகள் போன்றனவற்றை வழங்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ யு.எஸ்.அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி வழங்க முன்வந்ததை தொடர்ந்து இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இது குறித்து அதிபர் டிரம்ப் பிரதம மந்திரி ட்ரூடோவிற்கும் கனடிய மக்களிற்கும் அவர்களது உதவி மற்றும் இரு நாடுகளிற்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பையும் குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வேண்டுதல் பணியாளர்களோ அல்லது வன்பொருட்களோ அல்ல, ஆக அவசர தேவை பொருட்கள் மட்டுமே-முக்கியமாக சிறுவர்களிற்கான குழந்தைகளின் போத்தல்கள், குழந்தை உணவுகள், தொட்டில்கள் மற்றும் ரவல்கள் என்பனவாகும்.

இப்பொருட்கள் கனடா பொது சுகாதார அவசர குவியல்களில் இருந்தே வழங்கப்படுவதாகவும் ஆனால் மற்றய மாகாண அதிகாரிகள் கனடிய செஞ்சிலுவை சங்கம் போன்றனவும் தேவையான உதவி வழங்க முன்வந்துள்ளதாக அறியப்படுகின்றது.

உதவிகள் அனைத்து மிக விரைவாக இடம்பெறுகின்றன. கஷ்டம் ஏற்படும் போது அயலவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உதவுதல் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

canadamirror






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.