ஹஜ் பெரு­நாள், உல­கவாழ் மக்­க­ளுக்கு மிகச்சிறந்த முன்­மா­தி­ரி­யாகும் - ரணில்


"சுய­நலம், பேராசை என்­ப­வற்­றி­லி­ருந்து விடு­பட்டு தம்­மி­ட­முள்­ள­வற்றை ஏனை­யோ­ருடன் பகிர்ந்து கொள்­ளுதல், சக வாழ்வு மற்றும் உயர்வு, தாழ்­வினை நீக்கி சமத்­து­வத்­தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற உய­ரிய நோக்­கங்­க­ளுக்கு ஹஜ் பெரு­நாள் முன்­னு­ரிமை வழங்­கு­கி­றது. அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி முழு உல­கவாழ் மக்­க­ளுக்கும் மிகச் சிறந்த முன்­மா­தி­ரி­யாகும் என நான் கரு­து­கிறேன்" என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அவர் விடுத்­துள்ள ஹஜ் பெருநாள் செய்­தியில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,


"உலகம் முழு­வ­து­முள்ள முஸ்­லிம்கள் ஏழை – பணக்­காரன், கற்­றவர் – கல்­வி­யற்­றவர் என்ற எவ்­வி­த­மான பேத­மு­மின்றி மக்கா நகரில் ஒன்று சேர்ந்து, சமயக் கிரி­யை­களை மேற்­கொள்ளும் ஹஜ் நிகழ்வு இஸ்லாம் மார்க்­கத்தில் மிகவும் உய­ரி­ய­தாகக் கரு­தப்­படும் முக்­கி­ய­மா­னதோர் சமய நிகழ்­வாகும் .


இப்­ராஹீம் நபி­ய­வர்கள் தனது மக­னான இஸ்­மாயில் நபியை இறை­வ­னுக்­காகத் தியாகஞ் செய்ய முன்­வந்­த­மையை வெளிப்­ப­டுத்தும் இந்த நிகழ்­வினை உலகம் முழு­வதும் பரந்­துள்ள இஸ்­லா­மிய பக்­தர்கள் ஒன்­றி­ணைந்து உலக அமைப்­புக்­காக சமயக் கிரி­யை­களை மேற்­கொள்ளும் சர்­வ­தேச மாநா­டா­கவும் கரு­த­மு­டியும்.


சுய­நலம் மற்றும் பேராசை என்­ப­வற்­றி­லி­ருந்து விடு­பட்டு தம்­மி­ட­முள்­ள­வற்றை ஏனை­யோ­ருடன் பகிர்ந்து கொள்­ளுதல், சக வாழ்­வுடன் வாழுதல், சமூ­கத்தில் உயர்வு, தாழ்­வினை நீக்கி சமத்­து­வத்­துத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் போன்ற உய­ரிய நோக்­கங்­க­ளுக்கு ஹஜ் பெரு­நாளில் முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. அது முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி முழு உல­கவாழ் மக்­க­ளுக்கும் மிகச் சிறந்த முன்­மா­தி­ரி­யாகும் என நான் கரு­து­கிறேன். 


அந்த ஆன்­மீகப் பெறு­மா­னங்­களை உல­கிற்கு கொண்டு செல்வதற்கான பலம், துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து, இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் பக்தர்களுக்கும் மகிழ்ச்சியான பெருநாளாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்". என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.