3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தந்தை, மகன் பலி Building Collapsed 2 Died. 11 பேர் உயிருக்கு போராட்டம்.
திருச்சியில் உள்ள 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்துவிட்டனர். மேலும் 11 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மலைக்கோட்டை அருகே உள்ள குளத்தெருவில் 3 மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது. திருச்சியில் நேற்று கனமழை பெய்துள்ளதாலும், பக்கத்தில் இருந்த ஒரு வீடு இடிக்கப்பட்டதாலும் வலுவிழந்ததால் இந்த கட்டடம் விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸாரும், மூன்று வாகனங்களில் வந்த 20 மீட்புப்படையினரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டட இடிபாடுகளில் 5 குடும்பங்களைச் சேர்ந்தோர் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் கார்த்திக் (45), ஹரீஷ் (6) ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். இருவரும் தந்தை- மகனாவர்.
மற்ற 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த இடிபாடுகளுக்குள் 11 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அவர்களை உயிருடன் மீட்கும் பணியில் போலீசார் மற்றும் மீட்புப்படையினருடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.