திருச்சி மலைக்கோட்டையில் தஞ்சை குளத்தெருவில் 3 மாடி கட்டிடம் அதிகாலை 3.45 மணியளவில் திடீரென மளமளவென்று பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பதறியடித்துக் கொண்டு எழுந்து வீதிக்கு ஓடிவந்தனர்.
வீடு தரை மட்டமாகி கிடப்பதை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையம் மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
3 பொக்லின் எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் சிறிது, சிறிதாக அகற்றப்பட்டன.
மொத்தமாக ஒரே நேர்கோட்டில் கட்டிடம் தரைமட்டமானதால் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பெண் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பரமேஸ்வரி என்ற 1 1/2 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களில் 2 பேர் இந்த குழந்தையின் தாய் மற்றும் தந்தை என்று கூறப்படுகிறது. தாய் தந்தை பலியானதால் ஒன்றரை வயது குழந்தை பரமேஸ்வரி அனாதையாக தவிக்கிறது.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.