பூஸா தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகளை நலன் விசாரிக்கும் பொருட்டு பரிசுப் பொருட் களுடன் செல்லத் தீர்மானித்திருப்பதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அமைப்பொன்றுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
ரோஹிங்கிய அகதிகள் எமது நாட்டுக்கு வரவேண்டுமென வரவில்லை. அவர்கள் பயணித்த படகு திசை மாறியதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இலங்கைக் கடற்பரப்பில் வைத்து பிடிபட்டனர்.
அந்த அப்பாவி மக்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவ வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.
அவர்களுக்கு எதிராக தாக்கு தல் நடத்தியவர்கள் மனிதர்களாக இருக்கவே முடியாது.
மனிதாபிமானமற்ற வெறுக்கத்தக்க அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் எந்தத் வர்க்கத்தைச் சேர்ந்தவராயினும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர் களாவர் என மேலும் தெரிவித்தார்.
madawalanews

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.