இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி அட்டவணை அறிவிப்பு: இந்திய கிரிக்கெட் வாரியம்





நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மும்பை:

ஆஸ்திரேலியா கிர்க்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

முதல் ஒருநாள் போட்டி வருகிற 17-ந் தேதி சென்னையில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. 2-வது போட்டி (21-ந் தேதி), கொல்கத்தாவில் 3-வது போட்டி (24-ந் தேதி), இந்தூர், 4-வது போட்டி (28-ந் தேதி) பெங்களூர், 5-வது போட்டி (அக்டோ பர்-1) நாக்பூரில் நடக்கிறது.

மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே ராஞ்சி (அக்-7), கவுகாத்தி (அக்-10), ஐதராபாத் (அக்-13) ஆகிய இடங்களில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய தொடர் முடிந்ததும் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

நியூசிலாந்து தொடருக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி வருகிற அக்டோபர் 22-ந் தேதி மும்பையில் நடக்கிறது.

அதற்கு முன்பாக அக்-17, 19-ந் தேதிகளில் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் நியூசிலாந்து அணி விளையாடுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.