எனது சகோதரனை சிறையில் அடையுங்கள்! மைத்திரி வழங்கிய உத்தரவு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேனவுக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொலநறுவையில் விபத்து ஒன்றை ஏற்படுத்தி, இருவர் உயிரிழக்க காரணமாக இருந்த லால் சிறிசேன தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலநறுவை - ஹிங்குராகொட வீதியில் லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டர் சைக்களில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.

விபத்தின் பின்னர் லால் சிறிசேன அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில் நேற்று மாலை பொலிஸாரிடம் அவர் சரணடைந்தார்.

இதன்போது பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் ஜனாதிபதியை தொடர்பு கொண்டு சம்பவத்தை விளக்கியுள்ளார்.

“என்ன என்னிடம் கேட்கின்றீர்கள்”தராதரம் பாராமல் சட்டத்தை செயற்படுத்துங்கள் என ஜனாதிபதி பொலிஸ் அதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, அவரை பொலநறுவை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.