பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்! - இந்தியாவில்


இந்தியா: யோகி தலைமையிலான உத்திர பிரதேச பாஜக அரசு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் சிக்க வைத்து என்கவுண்டர் முறையில் கொல்லப்படுவதாக சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் உத்திர பிரதேசம் ஷாம்லி நகரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களில் இருவர் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில் சொல்லப்படுவது என்னவெனில், போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பியோடியதை அடுத்தே அவர்கள் கொல்லப்பட்டனர் என்கின்றனர். ஆனால் அது திட்டமிட்ட படுகொலை என்று ஹர்ஷ் மந்தர் தெரிவித்துள்ளார்.


மேலும் ஊடகங்கள் வேண்டுமென்றே யோகி அரசின் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றன. என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த முசஃபர் நகர் கலவர வழக்கை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்ப முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் ஹர்ஷ் மந்தர் தெரிவித்தார்.


சுமார் 30 முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் யோகி அரசில் பொய்யான வழக்குகள் மூலக் கைது செய்யப்பட்டு என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் ஹர்ஷ் மந்தர் வெளியிட்டுள்ளார்.

யோகி அரசு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.