எம்.வை.அமீர், யூ.கே.காலிதீன்-
அகிம்சையை போதனையாகக்கொண்ட மதத்தை பெருவாரியாக பின்பற்றும் மியன்மார் மக்களால், அங்குவாழும் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரியும் மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மியன்மார் அரசுக்கும் அதன் தலைவி சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கக் கோரியும் 2017-09-15 ஆம் திகதி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து மாபெரும் கண்டன பேரணியும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபாவிடம் மகஜர் சமர்ப்பிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச அமைப்புக்கள் பூரண ஆதரவு வழங்கியிருந்தன.
பேரணியின் போது கொலைகளை நிறுத்து, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சுயாட்சியை பெற்றுக்கொடு, ஆங் சாங் சூகியின் சமாதானத்திற்கான நோபல் பரிசை பறிமுதல்செய், ஐ.நா வே மியன்மார் மக்களை கண்திறந்து பார் என்ற கோஷங்களும் எளுப்பப்பட்டதுடன் பாததைகளும் ஏந்தி நின்றனர். இறுதியில் மியன்மார் மக்களுக்கு ஈடேற்றம் கோரி துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.