சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் கூலித்தொழிலாளி.
இவரது மனைவி சுமதி (வயது 28). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுமதிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தாரமங்கலம்- சங்ககிரி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு டாக்டர் சீனிவாசன் என்பவர் சுமதிக்கு சிகிச்சை அளித்தார்.அப்போது சிகிச்சை அளித்த டாக்டர் சீனிவாசன் சுமதியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி தனது கணவரிடம் கூறுவதாக தெரிவித்தார்.
நடந்த சம்பவத்தை கூறினால் உன்னைகொலை செய்து விடுவேன் என்று சுமதியை சீனிவாசன் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சுமதி தனது கணவரை அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பிறகு வீட்டிற்கு சென்றதும் நடந்த சம்பவத்தை கூறினார்.இதை கேட்டு சுமதியின் கணவர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் சீனிவாசன் தாக்கபட்டதாக கூறபடுகிறது.இதுகுறித்து சுமதி தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து இளம் பெண்ணை பலாத்காரம் சீனிவாசனை கைது செய்தனர்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.