இலங்கையின் தொடர் தோல்வியால் இலங்கை முன்னாள் வீரருக்கு ஏற்பட்டுள்ள நிலை



இலங்கை அணியின் தொடர் தோல்வியால் வர்ணையாளர் அறையில் தான் கடினமான நாட்களை கழிப்பதாக சர்வதேச கிரிக்கெட் வர்ணையாளரும் , இலங்கை அணியின் முன்னாள் வீரருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் இலங்கை அடைந்த தொடர் தோல்வி குறித்து பேசிய ஆர்னல்ட், இலங்கை அணி பெறும் தொடர் தோல்விகள் காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் அறையில் இத்தினங்களில் தான் மிகவும் கடினமான நாட்களை எதிர்கொள்கிறேன்.

நாம் எப்போதும் முயற்சிப்பது நல்ல விடயங்களை ஏற்படுத்த , குறைப்பாடுகளை ஏற்படுத்த அல்ல. நாட்டை போன்று வீரர்களையும் ஊக்கவிக்கவே முயற்சி செய்கிறோம். அனால் வீரர்களிடமிருந்து உரிய விடயம் வராவிட்டால் அது மிகவும் கடினமாகிவிடும்.

இலங்கை கிரிக்கட் அணி தமது திறமைக்கு ஏற்ப விளையாட வில்லை. இலங்கை வீரர்கள் அணிக்காக இதை விட சிறந்த பங்களிப்பை தர முடியும் என்பது எனது மட்டுமன்றி சர்வதேச கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

அணியை மீட்டு முன்னோக்கி கொண்டு செல்லும் பொறுப்பு மற்றையவர்களை விடவும் அணி வீரர்களுக்கே உள்ளது எனவும் ரசல் ஆர்னல்ட் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.