மியான்மர் நாட்டில் இருந்து வெளியேறும் ரோஹிங்யா முஸ்லீம்கள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று இந்திய சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மியான்மர் நாட்டில் உள்ள ராகினே மாகாணத்தில் பெளத்தர்களுடன், பங்களதேஷை பூர்விகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்றனர்.
கிட்டத்தட்ட 11 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் நீண்டகாலமாக பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். அவர்கள் மீது மியான்மர் பாதுகாப்பு படைகளும், சில பெளத்த மத குழுக்களும் கூட தாக்குதல் நடத்துகின்றனர்.
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக ரோஹிங்யா போராளிகள் ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருவதாகவும், இந்த போராளிகள் குழுவினர் கலவரங்களை தூண்டுவதாகவும், கிராம தலைவர்கள், அரசு உளவாளிகள் ஆகியோரை கொல்வதாகவும், தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறுகள் செய்வதாகவும் மியன்மார் அரசு குற்றம் சாட்டுகிறது.
இந்நிலையில், ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் அகதிகளாக எல்லைப் பகுதியில் வெளியேறி வருகின்றனர். அதிக அளவில் பங்களாதேஷுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்யா முஸ்லீம்களை மீண்டும் மியான்மர் திருப்பி அனுப்பும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது சர்வதேச மனித உரிமை மாநாடுகளின் பரிந்துரைகள் மீறும் வகையில் உள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ரோஹிங்யா முஸ்லீம்கள் குறித்து மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் செப்டம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஆஜரான பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அகதிகளை வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
madawalanews

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.