உலகை திரும்பி பார்க்க வைத்துள்ள இலங்கையின் தாமரைக் கோபுரம் பற்றிய முழு விபரங்கள் இதோ.




கொழும்பு நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரின் கண்களுக்கும் எட்டிய தூரத்திலிருந்து தெரியக் கூடியதாக தாமரைக் கோபுரம் அமைந் துள்ளது சீமெந்து நிறத்தில் காணப்படும் இக்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் முடிவுறாத போதிலும் அது வானளாவ வளர்ந்து நிற்கிறது.

இதன் நிர்மானப் பணிகள் 2011 ஆம் ஆண்டி லேயே ஆரம்பிக்கப்பட்டன அடுத்தாண்டில் நிர்மானப் பணிகள் நிறைவு செய்யப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இக்கோபுரத்தை பார்ப்பவர்கள் எப்படி இந்தளவு உயரமாக கட்டப்படுகிறது. இவ்வளவு பெரியதான கோபுரத்தில் ஆட்கள் எப் படி வேலை செய்வார்கள்? இப்போது உயரமென்ன? இப்பணி எப்போது நிறை வுறும்? இவ்வளவு பெரி தான கோபுரம் ஏன் கட்டப் படுகின்றது? இப்படியான பலகேள்விகள் பார்ப்பவர் களின் உள்ளத்தில் உருவாகுவது பொதுவானதே.


இக்கோபுரம் கொழும்பு, டி.ஆர் விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகா மையில் நிர்மாணிக்கப் பட்டு வருகிறது .

இக்கோபுரத்தின் உச் சிக்குச் சென்றால் நாம் எங்கே நிற்கிறோம் இவ்வளவு பெரிய உயர மான கட்டடம் ஒன்றுக்கு நான் சென்றதில்லை என்ற நினைப்புதான் வரும்.

இக்கட்டடத்தின் உச்சிக்கு செல்வதற்கு உள்பகுதியில் மின்சார லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

கொங்கிறீட் சுவர் குழல் வடிவத்திலே பார்க்கக் கூடியதாக இருக்கி றது. இக்கட்டடத்தின் 215 அடி உயரத்திற்கு (லிப்ட்) மின் உயர்த்தியூடாக செல் வதற்கு சுமார்2 நிமிடங் களே செல்கின்றன.

இக்கோபுரத்தினூடாக எமது நாட்டுக்குப் புகழ் கிடைப்பதுடன் கொழும்பு நகரின் அழகை மேன்மைப் படுத்தும் கோபுரமாகத் திகழும் உலக ரீதியில் வானத்தைத் தொடும் அளவில் பாரிய உயர் கட்ட டங்கள் கட்டப்பட்டுவரும் அதேநேரத்தில் பிரான்ஸ் பைசா கோபுரம் 324 மீட்டர் உயரமுடையது. ஆனால் தாமரைக் கோபுர த்தின் முழுமையான உயரம் 356 மீட்டராகும்.

இக்கோபுரம் தென் ஆசியாவின் மிக உயரமான கோபுரமாகும் அத்துடன், உலகிலேயே உயரமான கோபுரங்களுள் ஒன்றாக இதுவும் காணப் படும்

இத்தாமரைக் கோபு ரத்தில் முதலாம் மாடியில் வர்த்தகக் கடைத் தொகு தியொன்று நிர்மாணிக்கப் படுகிறது.

மேல் பகுதியில் 400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம் திருமண வரவேற்பு அறைகள், ஹோட்டல்கள், மற்றும் கவனயீர்ப்பு பார்வையாளர் மண்டபம் உட்பட பூரண வசதிகள் நிறைந்ததாக நிர்மாணிக்கப் பட்டு வருகின்றது .

அத்துடன், தொலைத் தொடர்பாடல்கள்அருங்காட் சியகம் மற்றும் உணவு விடுதி போன்றன கோபுரத்தின் அடித்தளத்தில் அமைக்கப்படுகின்றன.

கோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் சீனர்களுடன் இலங்கை ஊழியர்களும் இணைந்து பணியாற்று கின்றனர் பல்வேறு பரிவர்த்தனை கொண்டதாக அமைக்கப்படும் இந்தத் தாமரைக் கோபுரம் ஆசியாவிலேயே மிகவும் உயரமான தாமரை வடிவிலான கோபுரமாகவும் திகழவிருக்கிறது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழுவுக்காக நிர்மாணிக் கப்பட்டு வரும் இந்தத் தாமரை கோபுரத்துக்கான ஒதுக்கப்பட்ட மொத்த செலவினம் 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் தற்சமயம் இந்த கோபுரத்தின் நிர்மான வேலைகள் இரண்டு இலட்சம் சதுரஅடி அளவில் பூர்த்தியடைந்துள்ளன.

எதிர்காலத்தில் இதன் நிர்மான வேலைகள் வாரத்துக்கு ஐந்து மீட்டர் என்ற அடிப்படையில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப் படுகிறது ஆரம்ப கட்ட நிர்மான வேலைகள் நிறைவுபெற்றதுடன் இரண்டாம் கட்ட வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.

இக்கட்டடத்தின் நிர் மானப் பணிகள் அடுத்த வருடம் நிறைவுறும் என்று பொறியியலாளர் சிரோமால் பெர்னாண்டோ குறிப்பிட் டுள்ளார். இதில் 1500 வாகனங் களை ஒரே தடவையில் நிறுத்தி வைக்கக் கூடிய தாக பாரிய வாகன தரிப் பிடம் ஒன்றும் வர்த்தக கட்டடத் தொகுதியும் நிர்மானிக்கப்படும். சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மா ணிைக்கப்படும் தாமரைக் கோபுரம் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்படும் போது 1148 அடி உயரத்தையும் 3060 சதுர மீற்றர் விஸ்தீர னத்தையும் கொண்டதாக அமைந்திருக்கும்.

கடந்த காலங்களில் பல சர்ச்சைகளை உண்டு பண்ணிய இக்கோபுர நிர்மாணப் பணிகளுக்குப் பல தடைகளும் எதிர்ப்புகளும் உருவாகி மறைந்துள்ளன.

அத்துடன் தாமரைக் கோபு த்தில் அயல்நாடுகளுக்கு எதிரான மின்னணு கண்கா ணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தி நிராகரிக் கப்பட்டுள்ளது.

இக்கோபுர பணியில் மொறட்டுவை பல்கலைக் கழகத்தின் 50 பொறியிய லாளர்களும் பணியாற்று கின்றனர் கட்டட நிர்மாணத்திற்கு இரும்பு 5000 தொன், கொங் கிறீட் 20000 கனமீட்டரும் உள்வாங்கப்பட்டுள்ளன .


இக்கோபுரத்தின் மேல் பகுதியில் வேலை நடை பெறும் வேளையில் செக்க னுக்கு 12 மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் வேலைகள் முன்னெடுக்க முடியாமல் தடைப்பட்டுவிடும் இக்கோபுரத்தைச் சுற் றிலும் பேரவாவி இருப் பதினால் அத்திவாரப் பகுதியின் ஸ்திரத்திற்கு ஆரம்பக் கட்ட பணிக ளுக்கு 4000 கனமீட்டர் கொங்கிரீட்டும், 400 தொன் இரும்பும் செலவிடப்பட் டமை குறிப்பிடத்தக்கது.


இத்தாமரை கோபு ரத்தில் வானொலி மற்றும் தொலை காட்சிகளுக்காக 350 மீட்டர் உயரமான பரிவர்த்தனை கோபுரங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளது.

பத்து ஏக்கர் நிலப்யபரப்பை கொண்ட இந்த தாமரைத் கோபுர திட்டத்துக்கு பூங்கா ஒன்றும் அமைக்கப் படும். இந்தக் கோபுரம் நிலத்துக்கு கீழ் நான்கு மாடிகளுடன் ஆரம்பமாகிறது இக்கோபுரத்திற்கு அதி வேகமின்சாரலிப்டுகள் அமைக்கப்படவுள்ளதுடன், 85 
முதல் 90 மாடிகளுக்கு சுமார் இரண்டே நிமிட குறுகிய நேரத்தில் செல்லக்கூடியதாக இஐக்கும். கீழான நான்கு மாடிகள் நிர்மாணிக் கப்பட்டதும் இந்த கட்டடம் ஒரு சிலின்டரின் வடிவத்தில் காணப்படும் அது 270 மீட்டர் வரை அதாவது 35 அல்லது 90 மாடிகள் வரை உயரும் தாமரைப் பூவின் வடிவில் வரும் கோபுரத்தில் ஒன்பது மாடிகள் உள்ளடக் கப்படும்.


இந்த ஒன்பது மாடிகளுக்கும் பார்வையாளர் கூடங்களும் அமைக்கப்படும். இந்தக் கோபு ரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் தெளிவான காலநிலையில் இலங்கை முழுவதையும் பார்க்கலாம் என தொலைத்தொடர்பு
ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெ ரிவிக்கிறது.

அவ்வாறே சுமார் 50 வானொலி நிலையங்களும் 50 தொலைக்காட்சி நிலையங்களும் 20 தொலைத்தொடர்பு நிலையங்களும் அமைப்பதற்கு இடவசதி அளிக்கப்படும் என அறிவிக்கப் படுகிறது .


தாமரைக் கோபுரத்தில் டிஜிட்டல் பிராந்திய தொலைக்காட்சி தொடர்பாடல்கள் பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வசதிகள் போன்றன உருவாக்கப் படவுள்ளன

இவை இலங்கையர்களாலேயே பயன்படுத்தப்படும் அத்துடன், இக்கோ புரமானது சுற்றுலாத் துறையை ஊக்கு விப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது .

இக்கோபுரம் முடிவுற்றால் இலங்கையின் தொடர்பாடல் தொழில்நுட்பம் உயரும் என நம்பப்படுகிறது

madawalanews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.